ஒடிசாவில் இருந்து ஐந்தாவது முறையாக மதுரைக்கு வந்த 90.64 மெட்ரிக் டன் ஆக்ஸிஜன்

ஓடிசா மாநிலத்திலிருந்து மதுரைக்கு ஐந்தாவது முறையாக 6 டேங்கர்களில் 90.64 மெட்ரிக் டன் ஆக்ஸிஜன் வந்துள்ளது.

தமிழகத்தில் தென் மாவட்டங்களுக்கான ஐந்தாவது ஆக்ஸிஜன் எக்ஸ்பிரஸ் ரயில் இன்று மதுரை கூடல்நகர் ரயில் நிலையத்திற்கு வந்தது. ஒடிசா மாநிலம் ரூர்கேலாவிலிருந்து 6 டேங்கர் லாரிகளில் 90.64 மெட்ரிக் டன் திரவ மருத்துவ ஆக்ஸிஜன் கொண்டு வரப்பட்டுள்ளது. வெளி மாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு வந்த 35 ஆவது ஆக்ஸிஜன் எக்ஸ்பிரஸ் ரயில் மூலம் மருத்துவ ஆக்ஸிஜன் கொண்டு வரப்பட்டுள்ளது.

image

ஆக்ஸிஜன் எக்ஸ்பிரஸ் ரோல் ஆன் – ரோல் ஆப் திட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட்டு, ஆக்ஸிஜன் நிரப்பப்பட்ட 6 டேங்கர் லாரிகள் கூடல் நகர் ரயில் நிலையம் வந்தவுடன் சாலை மார்க்கமாக ஆக்சிஜன் தேவைப்படும் தென் தமிழகத்தின் பல்வேறு அரசு மருத்துவமனைகளுக்கு விரைவாக அனுப்பி வைக்கப்பட்டது.

இதுவரை தமிழகத்திற்கு ரயில் மூலம் 2188.96 மெட்ரிக் டன் திரவ மருத்துவ ஆக்ஸிஜன் கொண்டு வரப்பட்டுள்ளது. ஏற்கெனவே மதுரை கூடல்நகர் ரயில் நிலையத்திற்கு கடந்த வாரம் 98 மெட்ரிக் டன் ஆக்ஸிஜன் 7 டேங்கர் லாரிகள் மூலம் கொண்டு வரப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Facebook Comments Box
Author: sivapriya