ஓடிடியில் வெளியாகும் நயன்தாரா – விக்னேஷ் சிவனின் ’ராக்கி’!

நயன்தாரா – விக்னேஷ் சிவன் வழங்கும் ‘ராக்கி’ படம் ஓடிடியில் வெளியாகவிருக்கிறது என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

‘தரமணி’ நடிகர் வசந்த் ரவி, பாரதிராஜா, ரவீனா ரவி உள்ளிட்டோர் நடித்துள்ள ‘ராக்கி’ படத்தை செல்வராகவன் நடிக்கும் ‘சாணிக்காயிதம்’ படத்தை இயக்கிவரும் அருண் மாதேஸ்வரன் இயக்கி முடித்துள்ளார். இவர், கடந்த 2011-ஆம் ஆண்டு தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் வெளியாகி சிறந்த படத்தொகுப்பிற்கான தேசிய விருதை வென்ற ‘ஆரண்ய காண்டம்’ படத்தில் உதவி இயக்குநராகவும்,  ‘இறுதிச்சுற்று’ படத்தில் டயலாக் போர்ஷனை எழுதியும் பணியாற்றியவர். இந்நிலையில், இவர் இயக்கியுள்ள ‘ராக்கி’ படத்தை தங்களது ‘ரெளடி பிக்சர்ஸ்’ சார்பாக நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் வழங்குகிறார்கள்.

image

சமீபத்தில், இப்படத்தின் டீசர் வெளியாகி கவனம் ஈர்த்த நிலையில், ஓடிடி தளமான சோனி லைவில் வெளியாகவுள்ளது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏற்கனவே, சோனி லைவ்வில் விஜய் சேதுபதியின் ‘கடைசி விவசாயி, சிவகார்த்திகேயன் தயாரித்துள்ள ‘வாழ்’, கார்த்திக் நரேனின் ‘நகரகாசூரன்’ உள்ளிட்டப் படங்கள் வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Author: sivapriya