சீனாவில் முதல்முறையாக மனிதர் ஒருவருக்கு H10N3 பறவை காய்ச்சல் பாதிப்பு உறுதி

சீனாவில் H10N3 என்ற பறவை காய்ச்சலுக்கு முதல்முறையாக மனிதர் ஒருவர் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. இருப்பினும் இது தொற்றாக பரவ வாய்ப்புகள் மிக குறைவு எனத் தெரிவித்துள்ளது சீனா. ஏப்ரல் மாத இறுதியில் காய்ச்சலுக்கான அறிகுறியுடன் 41 வயது நபர் ஒருவர் ஜென்ஜியாங் நகரில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரை பரிசோதனை செய்ததில் H10N3 என்ற பறவை காய்ச்சல் தாக்கியுள்ளது உறுதியாகி உள்ளது. 

இதனை சீனாவின் தேசிய சுகாதார ஆணையம் உறுதி செய்துள்ளது. ஆன்லைன் மூலம் அது தொடர்பான அறிக்கையும் வெளியிடப்பட்டுள்ளது. உலகில் இந்த வகை பறவை காய்ச்சலுக்கு யாருமே பாதிக்கப்படவில்லை என தெரிவித்துள்ளது. 

இதற்கு முன்னதாக சீனாவில் 2016 – 17 வாக்கில் H7N9 என்ற பறவை காய்ச்சலால் மனிதர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பல நிலைகளில் சீனாவில் பறவை காய்ச்சல் ஏற்பட்டாலும் அந்த நோய் மனிதர்களிடையே பரவுவது அரிதினும் அரிது என  சீனாவின் தேசிய சுகாதார ஆணையம் தெரிவித்துள்ளது.

Facebook Comments Box
Author: sivapriya