வரலாற்றில் இன்று

•455 – உரோமை நகரம் வன்முறையாளர்களால் இரண்டு வாரங்கள் முற்றுகையிடப்பட்டு சூறையாடப்பட்டது.
•1098 – முதலாவது சிலுவைப் போர்: அந்தியோக்கியா மீதான முதலாவது முற்றுகை முடிவுக்கு வந்தது. சிலுவைப் போராளிகள் நகரைக் கைப்பற்றினர்.
•1615 – பிரெஞ்சு கத்தோலிக்க மதப்பரப்புனர்களின் முதற்தொகுதியினர் கனடாவின் கியூபெக் நகரை அடைந்தனர்.
•1805 – நெப்போலியப் போர்கள்: பிரெஞ்சு-எசுப்பானியக் கடற்படையினர் பிரித்தானியரிடம் இருந்து பிரான்சுக் கோட்டைக்குச் செல்லும் வழியில் டயமண்ட் குன்று என்ற ஆளில்லாத் தீவைக் கைப்பற்றினர்.
•1835 – பி. டி. பர்னம் ஐக்கிய அமெரிக்காவிற்கான தனது முதலாவது வட்டரங்கு சுற்றை ஆரம்பித்தார்.
•1896 – மார்க்கோனி தான் புதிதாகக் கண்டுபிடித்த கம்பியில்லாத் தந்திக்கான காப்புரிமத்தைப் பெற்றார்.
•1919 – அமெரிக்காவின் எட்டு மாநிலங்களில் அரசுக் கிளர்ச்சியாளர்கள் குண்டுகளை வீசினர்.
•1924 – ஐக்கிய அமெரிக்காவில் பிறந்த அனைத்துப் பழங்குடிகளுக்கும் அமெரிக்கக் குடியுரிமை வழங்கும் சட்டமூலத்தை அரசுத்தலைவர் கால்வின் கூலிஜ் அறிமுகப்படுத்தினார்.
•1941 – இரண்டாம் உலகப் போர்: செருமனியப் படையினர் கொண்டொமாரி கிராமத்தில் கிரேக்கக் குடிமக்களைக் கொன்றனர்.
•1946 – இத்தாலியில் முடியாட்சியைக் குடியரசாக மாற்றும் முடிவுக்கு மக்கள் பெருமளவு ஆதரித்து வாக்களித்தனர். இத்தாலியின் மூன்றாம் உம்பெர்த்தோ மன்னர் நாட்டை விட்டு வெளியேறினார்.
•1953 – இரண்டாம் எலிசபெத் ஐக்கிய இராச்சியத்தின் மகாராணியாக முடிசூடினார். தொலைக்காட்சியில் நேரடியாக ஒளிபரப்பப்பட்ட முதலாவது பெரிய பன்னாட்டு சர்வதேச நிகழ்வு இதுவாகும்.
•1955 – சோவியத் ஒன்றியமும் யுகோசுலாவியாவும் பெல்கிறேட் உடன்பாட்டின் மூலம் இரு நாடுகளுக்கும் இடையே 1948 இல் அறுந்து போன உறவைப் புதுப்பித்தன.
•1962 – சிலி, இத்தாலி அணிகளுக்கு இடையே நடந்த 1962 உலகக்கோப்பை காற்பந்துப் போட்டி ஒன்றில் விளையாட்டு வீரர்களுக்கு இடையே இடம்பெற்ற கைகலப்புகளை அடக்கக் காவல்துறையினர் பல முறை அழைக்கப்பட்டனர்.
•1964 – பலத்தீன விடுதலை இயக்கம் அமைக்கப்படட்து.
•1965 – வியட்நாம் போர்: முதலாவது தொகுதி ஆத்திரேலியப் படைகள் தென் வியட்நாமை அடைந்தது.
•1966 – நாசாவின் சேர்வெயர் 1 விண்கலம் சந்திரனில் இறங்கியது. சந்திரனில் மெதுவாக இறங்கிய முதலாவது அமெரிக்க விண்கலம் இதுவாகும்.
•1967 – மேற்கு செருமனியில் ஈரானின் அரசுத்தலைவரின் வருகைக்கு எதிராக வன்முறை ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றன. ஒருவர் காவல்துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
•1979 – திருத்தந்தை இரண்டாம் அருள் சின்னப்பர் போலந்துக்குப் பயணம் மேற்கொண்டார். பொதுவுடைமை நாடொன்றிற்குச் சென்ற முதலாவது திருத்தந்தை இவராவார்.
•1983 – டெக்சசில் இருந்து மொண்ட்ரியால் நோக்கிச் சென்ற எயார் கனடா வானூர்தி விபத்துக்குள்ள்ளானதில் 23 பயணிகள் உயிரிழந்தனர்.
•1999 – பூட்டானில் முதற் தடவையாக தொலைக்காட்சி அறிமுகப்படுத்தப்பட்டது.
•2003 – வேறொரு கோளுக்கான (செவ்வாய்) மார்ஸ் எக்ஸ்பிரஸ் என்ற தனது முதலாவது விண்கலத்தை ஐரோப்பிய ஆய்வு மையம் ஈசா கசக்ஸ்தானில் பைக்கனூரில் இருந்து ஏவியது.
•2012 – முன்னாள் எகிப்திய அரசுத்தலைவர் ஓசுனி முபாரக் 2011 எகிப்தியப் புரட்சியின் போது ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது வன்முறையை ஏவி விட்ட குற்றத்திற்காக அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
•2014 – தெலுங்கானா அதிகாரபூர்வமாக இந்தியாவின் 29-வது மாநிலமாக அறிவிக்கப்பட்டது.