மகாராஷ்டிராவில் சாலையில் நடந்து சென்ற புலி : அச்சத்தில் உறைந்த வாகன ஓட்டிகள்

மகாராஷ்டிர மாநிலத்தில் சாலைகளில் புலிகள் நடந்து சென்றதால் வாகன ஓட்டிகள் அச்சம் அடைந்தனர்.

மகாராஷ்டிராவில் உள்ள தடோபா அந்தாரி புலிகள் காப்பக சாலையில் வாகன ஓட்டிகள் சென்று கொண்டிருக்கும்போது இரண்டு புலிகள் நின்றுகொண்டிருந்தன.அச்சமடைந்த வாகன ஓட்டிகள் தங்கள் செல்போனில் வீடியோ எடுத்துள்ளனர். அந்த வீடியோக்கள் தற்போது வைரலாகி வருகின்றன.

Author: sivapriya