கர்நாடக முன்னாள் முதல்வர் சித்தராமையா காய்ச்சல் அறிகுறியுடன் மருத்துவமனையில் அனுமதி

கர்நாடக மாநில முன்னாள் முதல்வர் மற்றும் கர்நாடக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான சித்தராமையா காய்ச்சல் அறிகுறியுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு வயது 72. அவருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொண்டதில் தொற்று பாதிப்பு இல்லை என தெரியவந்துள்ளது. 

இருந்தும் காய்ச்சல் இருப்பதால் பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார். கடந்த ஏப்ரல் 29 அன்று கொரோனா தொற்றுக்கான இரண்டாவது டோஸை செலுத்திக் கொண்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

அவரது உடல்நிலை சீராக இருப்பதாகவும், மருத்துவ வல்லுநர் குழு அவரை தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் அவர் அனுமதிக்கப்பட்டுள்ள மனிபால் மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. 

Author: sivapriya