ஓவியம் மூலம் கொரோனா தடுப்பு விழிப்புணர்வை ஏற்படுத்தும் புதுக்கோட்டை நகராட்சி

கொரோனா பாதிப்பு குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் புதுக்கோட்டை நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வரையப்பட்டு வரும் ஓவியங்கள் காண்போருக்கு எச்சரிக்கை உணர்வை ஏற்படுத்தியுள்ளது.

புதுக்கோட்டை நகராட்சியில் கொரோனா தொற்று அதிக அளவில் பரவிவரும் நிலையில், புதுக்கோட்டை நகராட்சி நிர்வாகம் சார்பில் நகராட்சி பணியாளர்கள் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையத்தில் முழு ஊரடங்கு உத்தரவை மீறி வாகனங்களில் தேவையின்றி சுற்றுபவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக புதுக்கோட்டை நகராட்சி மற்றும் புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் முத்துராஜா சார்பில் புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையம் முன்பு கொரோன விழிப்புணர்வு ஓவியம் வரையப்பட்டது.

image

அந்த ஓவியத்தில் கொரோன வைரஸ் உருவம் மற்றும் முன்கள பணியாளர்களாக இருக்கும் மருத்துவர்கள் செவிலியர்கள் துப்புரவு பணியாளர்கள் ஆகியோர்களின் சேவையை போற்றும் விதத்தில் வரையப்பட்டுள்ள காட்சிகள் காண்போரை கவர்ந்துள்ளது. மேலும் பொதுமக்கள் அனைவரும் முகக் கவசம் அணிவது குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தத்துரூபமாக வரையப்பட்டுள்ள ஓவியங்கள் பொதுமக்களுக்கு எச்சரிக்கை உணர்வை ஏற்படுத்தியுள்ளது.

Facebook Comments Box
Author: sivapriya