மேற்கு வங்கம்: 40 கிலோமீட்டர் பயணத்திற்கு ரூ.17,000 வசூலித்த ஆம்புலன்ஸ்!

மேற்கு வங்கத்தில் ஆம்புலன்ஸில் நோயாளியை அழைத்துச் செல்ல 40 கிலோ மீட்டர் தூரத்திற்கு ரூ.17,000 வசூலித்த விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேற்கு வங்கம் மாநிலத்தைச் சேர்ந்த சுபோதீப் சென் என்பவர் சுகாதாரத்துறைக்கு புகார் ஒன்றை அளித்துள்ளார். அந்த புகாரில், நோய்வாய்ப்பட்ட தனது தந்தையை அசன்சோலில் இருந்து துர்காபூருக்கு அழைத்துச் சென்றதற்காக, இடைப்பட்ட 40 கிலோ மீட்டர் தூரத்திற்கு கட்டணமாக ஆம்புலன்ஸ் ஆபரேட்டர்  ரூ.17,000 வசூலித்ததாக தெரிவித்துள்ளார். 

இந்த விவகாரத்தில் நடவடிக்கை கோரி சுகாதார தலைமை மருத்துவ அதிகாரியிடம் புகார் அளித்துள்ளாதகாவும் சுபோதீப் சென் தெரிவித்துள்ளார். அரசு நிர்ணயித்ததை விட, பலமடங்கு கூடுதலாக ஆம்புலன்ஸ் கட்டணம் வசூலிப்பதாக புகார்கள் வருவது தற்போது அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

Facebook Comments Box
Author: sivapriya