+2 தேர்வை முழுமையாக ரத்து செய்வதற்கு பதிலாக… – கல்வியாளர் மாலதி

12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு குறித்த ஆலோசனைகளை வழங்குமாறு தமிழக அரசு தெரிவித்துள்ளது. இந்நிலையில் கல்வியாளர் மாலதி இதுகுறித்து கூறுகையில், ‘’தேர்வுகளை முழுமையாக கைவிடாமல் மொழிப்பாடங்களை தவிர்த்து முக்கியப் பாடங்களுக்கு மட்டும் அந்தந்த பள்ளிகளிலேயே தேர்வு நடத்தலாம். மாணவர்களுக்கான வாய்ப்பை தவறவிடக்கூடாது. கேரளா 10 மற்றும் 12ஆம் வகுப்பு தேர்வுகளை நடத்தி முடித்திருக்கிறது. சிபிஎஸ்இ மற்றும் ஐசிஎஸ்இ-இன் மதிப்பெண் வரைமுறைகள் வித்தியாசமானது. ஆனால் நமது அரசு பள்ளி மாணவர்களுக்கான வாய்ப்பை ஏன் தவறவிட வேண்டும்?’’ என்று கேள்வி எழுப்பியுள்ளார்.  

Author: sivapriya