”நம்மால் பாதுகாப்பாக தேர்வை நடத்த முடியும்; ஆகையால்..” – கல்வியாளர் உமா மகேஷ்வரி

ப்ளஸ் 2 தேர்வு நடத்துவது குறித்து ஆலோசனைகளை வழங்கலாம் என தமிழக அரசு அறிவித்துள்ள நிலையில், அது தொடர்பாக கல்வியாளர் உமா மகேஷ்வரி கூறும்போது, “மாற்று முறையை நம் கைகளில் வைத்துக்கொண்டு நாம் தேர்வை ரத்து செய்தால் பராவாயில்லை. ஆனால் அப்படி ஏதும் நம்மிடம் இல்லை. ஆன்லைனில் தேர்வுகள் நடத்தப்பட்டிருக்கிறது, மதிப்பெண்களை கொடுத்து விடலாம் போன்ற எண்ணங்களை நாம் விட்டுவிடலாம். காரணம் நம்மால் பாதுகாப்பாக தேர்வை நடத்த முடியும். மாணவர்கள் 3 மாதங்களாக பள்ளிக்கு வந்து சென்றார்கள். ஆசிரியர்களுக்கும் இதனை எப்படி திட்டமிடலோடு நடத்த வேண்டும் என்பது தெரிய வந்துள்ளது. ஆகையால் தேர்வுகளை பதற்றமின்றி கண்டிப்பாக நடத்த வேண்டும் என்பது என்னுடைய கருத்து” என்றார்.

Facebook Comments Box
Author: sivapriya