துணை நடிகை பாலியல் புகார்: முன்னாள் அமைச்சர் மணிகண்டனுக்கு சம்மன் அனுப்ப திட்டம்

துணை நடிகை அளித்த பாலியல் புகார் தொடர்பாக முன்னாள் அமைச்சர் மணிகண்டனுக்கு சம்மன் அனுப்ப காவல்துறையினர் திட்டமிட்டுள்ளனர். நடிகைக்கு கருக்கலைப்பு செய்த தனியார் மருத்துவமனையின் மருத்துவரிடமும் விசாரிக்க முடிவு செய்யப்பட்டிருக்கிறது.

அ.தி.மு.க.வைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது துணை நடிகை ஒருவர் பாலியல் புகார் அளித்திருந்தார். அதன்பேரில் மணிகண்டன் மீது 6 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறையினர், அவருக்கு சம்மன் அனுப்பி விசாரிக்கத் திட்டமிட்டுள்ளனர். கட்டாயக் கருக்கலைப்பு செய்ததாக அளித்த புகாரின் அடிப்படையில், கருக்கலைப்பு செய்ததாக கூறப்படும் மருத்துவரிடம் விசாரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் சம்பந்தப்பட்ட தனியார் மருத்துவமனைக்கு சம்மன் அனுப்பப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Author: admin