பாலியல் புகார்: ராஜகோபாலனை 3 நாட்கள் காவலில் விசாரிக்க அனுமதி

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் ஆசிரியர் ராஜகோபாலனை 3 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுப்பது மற்றும் ஆபாச குறுஞ்செய்திகள் அனுப்பியது தொடர்பாக கே.கே. நகர் தனியார் பள்ளியின் வணிகவியல் ஆசிரியர் ராஜகோபாலன் கடந்த 24ஆம் தேதி கைது செய்யப்பட்டார்.

இந்த வழக்கு குறித்து போக்சோ நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு 3ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அவரை 5 நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி கோரிய நிலையில் 3 நாட்கள் விசாரிக்க போக்சோ நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

Author: admin