உலக மிதிவண்டி நாள்

உலக மிதிவண்டி நாள் (World Bicycle Day) ஆண்டுதோறும் சூன் 3 நாள் அன்று கொண்டாடப்பட்டு வருகின்றது. 2018 ஏப்ரலில் ஐக்கிய நாடுகள் பொதுச் சபை இந்நாளை பன்னாட்டு நாளாக அறிவித்தது.உலக மிதிவண்டி நாளுக்கான ஐக்கிய நாடுகளின் தீர்மானம் “இரண்டு நூற்றாண்டுகளுக்கும் மேலாக பயன்பாட்டில் இருந்த மிதிவண்டிகளின் தனிச்சிறப்பு, நீண்டகாலப் பயன்பாடு, பல்திறன், மற்றும் சுற்றுச்சூழலுக்கு ஏற்ற ஒரு எளிமையான, மலிவான, நம்பகமான, சுத்தமான போக்குவரத்துக் கருவி” என்பதை அங்கீகரித்தது.

Facebook Comments Box