கருணாநிதியின் உதவியாளர் சண்முகநாதனை மருத்துவமனையில் நேரில் நலம் விசாரித்த உதயநிதி

உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் உதவியாளர் சண்முகநாதனை திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் இன்று நேரில் சந்தித்து நலம் விசாரித்துள்ளார்.

மறைந்த முன்னாள் முதல்வரின் நிழலாகப் பார்க்கப்பட்டவர், சண்முகநாதன். 48 ஆண்டுகளாக கருணாநிதியின் நேர்முக உதவியாளராக பணியாற்றியவர், தற்போது உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், அவரை மருத்துவமனைக்குச் சென்று நலம் விசாரித்துள்ளார் உதயநிதி ஸ்டாலின்.

image

இதனை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளவர், ”முத்தமிழறிஞர் கலைஞரின் எண்ணங்களை உள்வாங்கி அவரது கண் அசைவுக்கு ஏற்ப காரியமாற்றியவர். கலைஞருடைய அரசியல் வாழ்வின் ஆவணம். சண்முகநாதன் மாமா அவர்களை மருத்துவமனையில் இன்று சந்தித்து நலம் விசாரித்தேன். எனது பணிகளை குறிப்பிட்டு நெகிழ்ச்சியோடு வாழ்த்திய மாமா அவர்களுக்கு அன்பும் நன்றியும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

 

Facebook Comments Box
Author: sivapriya