டோக்கியோ ஒலிம்பிக் : காயம் காரணமாக விலகினார் கரோலினா மரின்

டோக்கியோ ஒலிம்பிக் தொடரிலிருந்து காயம் காரணமாக விலகியுள்ளார் பேட்மிண்டன் வீராங்கனை கரோலினா மரின். ஸ்பெயின் நாட்டை சேர்ந்த இவர் கடந்த 2016 ரியோ ஒலிம்பிக்கில் மகளிர் ஒற்றையர் பிரிவில் தங்கப்பதக்கம் வென்றிருந்தார். இந்த முறையும் அவர் பதக்கம் வெல்லும் வீராங்கனைகளின் பட்டியலில் இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

இந்நிலையில்தான் பயிற்சியின்போது கால் மூட்டு பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக அவருக்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய அவசியம் உள்ளது என்பதால் இந்த கடினமான முடிவை எடுத்துள்ளார் கரோலினா மரின். 

2016 ரியோ ஒலிம்பிக் பேட்மிண்டன் மகளிர் ஒற்றையர் இறுதியில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து, மரினிடம்தான் 1 – 2 என்ற செட் வித்தியாசத்தில் வீழ்ந்து வெள்ளி பதக்கம் வென்றிருந்தார். இந்த முறை அவருக்கு அந்த சிக்கல் இருக்காது என்ற சூழல் நிலவுகிறது. 

Facebook Comments Box
Author: sivapriya