மத்திய அரசின் 18+ தடுப்பூசி கொள்கை பகுத்தறிவற்றது: உச்சநீதிமன்றம் கருத்து

45 வயதுக்கு மேற்பட்டோருக்கு இலவச தடுப்பூசியும், அதற்கு குறைந்த வயதினருக்கு கட்டணம் வசூலிக்கப்பட்டு தடுப்பூசியும் வழங்கும் மத்திய அரசின் தடுப்பூசி கொள்கையை, ‘தன்னிச்சையான, பகுத்தறிவற்ற’ முடிவு என டெல்லி உச்சநீதிமன்றம் இன்று கூறியுள்ளது.

மேலும் தடுப்பூசி விநியோகத்துக்கு மக்களை வேகமாக உள்ளிழுக்க வேண்டுமென்றும், மிகக்கடுமையான சூழலில் இந்தியா இருக்கிறதென்றும் நீதிமன்றம் கூறியுள்ளது. “18 – 44 வயதுக்குட்பட்டவர்களில், கோவிட் 19 நோய் தாக்கும்போது, அவர்களுக்கு வெறுமனே நோய்ப் பாதிப்புகளை மட்டும் ஏற்படுத்துவதில்லை. உடன் நீடித்த உடல்நல சிக்கல்கள், நிறைய நாட்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக தங்கும் சூழல் ஏற்படுவது, இறப்புக்கான சூழலை அதிகப்படுத்துதல் என பல சிக்கல்களை ஏற்படுத்துகிறது.

image

கொரோனா வைரஸ், பல திரிபுகளை உருவாக்கி, தங்களின் இயல்பை மாற்றிக்கொண்டே இருக்கும் இந்த நேரத்தில், இப்போது ஆபத்தில் யார் இருக்கிறார்களோ அவர்களையே நாம் காக்க வேண்டும். அந்த வகையில், 18 – 44 வயதினருக்கு உடனடியாக தடுப்பூசி போட வேண்டும். அதுவே விஞ்ஞானிகளும் அறிவியலாளர்களும் சொல்லும் பரிந்துரை. ஆனால் அரசு அவர்களைத்தவிர, பிற வயதினருக்கே முன்னுரிமை தருகிறது.

தேவை அறிந்து, 18 – 44 வயதினருக்கு முன்னுரிமை தந்து, மத்திய அரசே இலவசமாக இரண்டு கட்ட டோஸூம் அவர்களுக்கு தரவேண்டும். மாநில அல்லது யூனியன் அரசுகள் – தனியார் மருத்துவமனைகளில் இதை பணம் கொடுத்து போடும் நிலை மாற வேண்டும்” எனக்கூறியுள்ளனர் உச்சநீதிமன்ற நீதிபதிகள்.

நீதிபதி சந்த்ராசௌத் கூறுகையில், “தடுப்பூசி கொள்முதலில், நாங்கள் உலகளவில் பேச்சுவார்த்தை நடத்துவோம், அவர்களுக்கான தடுப்பூசிகளை வாங்குவோம் என்று மத்திய அரசு, மாநில அரசுகளுக்கு தெளிவுபடுத்த வேண்டும்” எனக்கேட்டுக் கொண்டுள்ளார்.

Facebook Comments Box
Author: sivapriya