சிவகங்கை: சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக 17 வயது சிறுவன் கைது

15 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக வந்த புகாரின் பேரில் 17 வயது சிறுவன் கைது செய்யப்பட்டார்.

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி சூடாமணி புரத்தை சேர்ந்தவர் அருள் (17). இவர் தனது வீட்டருகே உள்ள உறவினர் வீட்டுக்கு அடிக்கடி வந்து சென்றுள்ளார். அப்போது அங்கிருந்த 15 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதை அறிந்த சிறுமியின் தாயார் காரைக்குடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

image

புகாரின் பேரில் நடவடிக்கை மேற்கொண்ட அனைத்து மகளிர் காவல்நிலைய போலீசார், அருளை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அருள் சிறுமியிடம் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து அருளை கைது செய்த போலீசார், விசாரணை செய்து வருகின்றனர்.

Facebook Comments Box
Author: sivapriya