தமிழ்நாட்டில் தொடர்ந்து குறைந்து வரும் கொரோனா: ஒரேநாளில் 24,405 பேருக்கு பாதிப்பு

தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 24,405 பேர் புதிதாக கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 460 பேர் சிகிச்சை பலன் அளிக்காமல் உயிரிழந்துள்ளனர். 32,221 பேர் தொற்றிலிருந்து குணம் அடைந்துள்ளனர். தமிழகத்தில் இதுவரை  21,72,751 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 

பாதிக்கப்பட்ட 24,405 பேரில் ஐந்து பேர் வேறு மாநிலங்களை சேர்ந்தவர்கள். ஆந்திராவிலிருந்து வந்த இருவர், கர்நாடகாவில் இருந்து வந்த இருவர் மற்றும் மேற்கு வங்கத்தை சேர்ந்த ஒருவர் இதில் அடங்கும். 

தலைநகர் சென்னையில் 2,062 பேர் இன்று நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். கோவையில் இந்த எண்ணிக்கை 2980-ஆக உள்ளது. ஈரோடு, சேலம், தஞ்சாவூர், திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் இன்று மட்டும் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 

13,448 ஆண்களும், 10,957 பெண்களும் இன்று நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.  தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை கடந்த சில நாட்களாக குறைந்து வருவது குறிப்பிடத்தக்கது.

Facebook Comments Box
Author: sivapriya