கருப்பு பூஞ்சை நோய்க்கு 30000 மருந்து குப்பிகள் வேண்டும் – முதல்வர் மு.க.ஸ்டாலின்

கருப்பு பூஞ்சை நோய்க்கு முப்பது ஆயிரம் மருந்து குப்பிகள் வேண்டும் என மத்திய அரசுக்கு கடிதம் மூலம் வலியுறுத்தியுள்ளார் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின். இது குறித்து முதல்வர் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தனுக்கு கடிதம் எழுதி உள்ளார். 

தமிழகத்தில் அதிகரித்து வரும் கருப்பு பூஞ்சை நோய்க்கு எதிராக சிகிச்சை அளிக்கும் வகையில் அதற்கு தேவைப்படும் மருந்துகளை ஒதுக்கி கொடுக்க வேண்டும் என அந்த கடிதத்தில் தெரிவித்துள்ளார். 

ஆம்போடெரிசின்-பி மருந்து குப்பிகளை உடனடியாக வழங்க வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

Facebook Comments Box
Author: sivapriya