“எனது ஃபேஸ்புக் பக்கத்தை ஹேக் செய்து விட்டனர்” – மலையாள நடிகர் அனுப் மேனன்

மலையாள நடிகர் அனுப் மேனன் தனது  ஃபேஸ்புக் பக்கம் ஹேக் செய்யப்பட்டதாக அறிவித்துள்ளார்.

மலையாள சினிமாவின் திரைக்கதையாசிரியரும் உறுதுணை நடிகருமான அனுப் மேனன், இன்ஸ்டாகிராமில் தனது ஃபேஸ்புக் பக்கத்தை ஹேக்கர்கள் ஹேக் செய்துவிட்டதாக தெரிவித்துள்ளார்.

 ” 15 லட்சம் ஃபாலோயர்கள் கொண்ட எனது ஃபேஸ்புக் ஐ.டியை ஹேக் செய்துவிட்டார்கள். எனது சுய விவரத்தை அகற்றிவிட்டு வேடிக்கையான வீடியோக்களை பதிவிடுகிறார்கள். இது தொடர்பாக சைபர் கிரைம் போலீஸாருக்கு புகார் அளித்துள்ளேன்.  எனது ஃபேஸ்புக் பக்கத்தின் நான்கு அட்மின்களையும் நீக்கியுள்ளனர். விரைவில் ஆராய்ந்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று சைபர் கிரைம் போலீஸார் உறுதியளித்துள்ளனர். விரைவில் ஃபேஸ்புக் பக்கத்தை திரும்பபெறுவேன் என்ற நம்பிக்கை இருக்கிறது” என்று உறுதியுடன் கூறியுள்ளார்.

Author: sivapriya