தலைநகர் டெல்லியில் 1044 பேருக்கு கருப்பு பூஞ்சை பாதிப்பு!

டெல்லியில் ஆயிரத்து 44 பேருக்கு கருப்பு பூஞ்சை நோய் ஏற்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். கொரோனா பாதிப்பு குறைந்துவரும் சூழலில், மாநிலம் முழுவதும் தடுப்பூசி போட டெல்லி அரசு தயாராக உள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் தெரிவித்துள்ளார்.

இதனால், கொரோனா தடுப்பூசி குறித்த தனது கொள்கைளை மத்திய அரசு மாற்றிக்கொள்ள வேண்டும் என்றும் போதிய அளவு தடுப்பூசி கிடைக்க வகை செய்ய வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார். டெல்லியை பொறுத்தவரை, கருப்பு பூஞ்சை நோயால் ஆயிரத்து 44 பேர் பாதிக்கப்பட்டதாகவும், இதில் 92 பேர் குணமடைந்த நிலையில், 89 பேர் உயிரிழந்துவிட்டதாகவும் அமைச்சர் சத்யேந்திர ஜெயின் தெரிவித்தார்.

Author: sivapriya