கணவரின் முன்னாள் மனைவியை காப்பாற்ற கிட்னியை தந்த இரண்டாம் மனைவி…

தனது கணவரின் முன்னாள் மனைவிக்காக சிறுநீரகத்தை கொடுத்த இரண்டாம் மனைவியின் செயல் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் ப்ளோரிடா மாகாணத்தைச் சேர்ந்த தம்பதி ஜிம் மற்றும் மைலன் மெர்தே. விவகாரத்து பெற்ற இவர்கள் கடந்த 2 தலைமுறைகளாக பிரிந்து வாழ்ந்து வந்தாலும், குழந்தைகளின் நலன் கருதி இருவரும் நல்ல நண்பர்களாக பழகி வந்துள்ளனர். கடந்த 10 வருடமாக டெப்பி என்ற பெண்ணுடன் பழகி வந்த ஜிம் கடந்த வருடம் நவம்பர் 22 ஆம் தேதி அவரை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். சில வருடங்களாகவே சிறுநீரக பிரச்னையால் அவதிப்பட்டு வந்த மைலன் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவரின் உடல்நிலை மோசமானது.

image

சிறுநீரகங்களின் செயல்பாடும் 8 சதவீதமாக குறைந்தது. சிறுநீரகத்தை மாற்றியே ஆக வேண்டும் என்ற இக்கட்டான நிலைக்கு மைலன் தள்ளப்பட, அவரது சகோதரர் சிறுநீரகத்தை தர முன்வந்தார். ஆனால் அவரது சிறுநீரகம் மைலன் சிறுநீரகத்தோடு ஒத்துப்போகவில்லை. இந்தச் சூழ்நிலையில்தான் தனது சிறுநீரகத்தை தர முன்வந்தார் டெப்பி. அவரது சிறுநீரகம் மைலனின் சிறுநீரகத்தோடு ஒத்தும் போனது. மைலனின் சிறுநீரக மாற்றுச் சிகிச்சைக்காக கடுமையான பரிசோதனைகள் நடந்தன. அதில் டெப்பில் 24 மணி நேரம் தனது சிறுநீரை ஜக்கில் பிடித்துக்கொண்டிருந்ததும் அடங்கும்.

பரிசோதனைகள் நடந்த பின்னர், கொரோனா தொற்று பரவல் அதிகரித்ததால் அறுவை சிகிச்சை தள்ளிப்போய் கொண்டே இருந்தது. இறுதியில் மருத்துவர்கள் அறுவை சிகிச்சையை செய்ய ஜிம் மற்றும் டெப்பி திருமணம் நடந்த 2 நாட்களுக்கு பின்னர் தேதி குறித்தனர். இதனால் திருமணத்தை டெப்பி தள்ளிவைக்க, பின்னர் அவரின் அன்புக்குரியவர்களுக்காக செய்து கொண்டார்.

image

அவ்வப்போது நடந்த சந்திப்புகளில், மைலனுக்கு டெப்பி நன்கு அறிந்தவராய் இருந்த போதிலும், இருவருக்கும் இடையில் பெரிதான நெருக்கம் என்பது இல்லை என்பதே உண்மையாக இருந்தது. ஆனால், ஒரு முறை தனது டெப்பியின் சகோதரர் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த
போது அவருக்கு இரட்டை நுரையீரல் மாற்று அறுவைச்சிகிச்சை செய்ய வேண்டி இருந்தது. அப்போது தனது நுரையீரலை தர முன்வந்தார் மைலன். ஆனால் அவரின் நுரையீரல் டெப்பியின் சகோதரரின் நுரையீரலுடன் பொருந்தவில்லை.

அந்த நன்றியை மனதில் வைத்திருந்த டெப்பி தற்போது தனது சிறுநீரகத்தை கொடுத்து மைலனின் உயிரை காப்பாற்றி இருக்கிறார். அறுவை சிகிச்சையும் நல்லபடியாக முடிந்தது.

இது குறித்து, டெப்பி கூறும் போது “அதை மாற்ற நான் முயற்சிக்க வில்லை. மாறாக கடவுள் என்னிடம் இந்தத்தருணத்தில் இதை
நான் செய்தாக வேண்டும் என்று கூறினார். மேலும் தனது திருமண நாளும், எனக்கு அறுவை சிகிச்சை நடந்த நாளும் எனது வாழ்நாளின் மிகச்சிறந்த நாட்கள்” என்று நெகிழ்ந்தார்.

இது குறித்து மைலன் கூறும் போது, “இதை அவர் இதயத்தில் இருந்து செய்திருக்கிறார். அவர் என் உயிரை காப்பாற்றி இருக்கிறார். நாங்கள் ஒன்றாக இருக்க வேண்டும்” என்று கூறினார்.

Facebook Comments Box
Author: sivapriya