தமிழ்நாட்டில் ஊரடங்கு தளர்வு? முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை

தமிழகத்தில் முழு ஊரடங்கில் தளர்வுகள் அளிப்பது குறித்து அதிகாரிகளுடன் இன்று ஆலோசனை நடத்துகிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.

தமிழ்நாட்டில் கொரோனா 2-வது அலை பரவல் காரணமாக கடந்த மே மாதம் 10-ம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. ஆனால் தொற்று பாதிப்பு குறையாததையடுத்து பின்னர் தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டது. மேலும் இந்த ஊரடங்கு வருகிற 7-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

ஊரடங்கு அமலில் இருந்தாலும் பொதுமக்களுக்கு தேவையான காய்கறி, மளிகை பொருட்கள் தடையின்றி கிடைக்க தமிழக அரசு நடவடிக்கைகளை எடுத்துள்ளது. இதற்கிடையே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறும்போது, ‘ஊரடங்கை நீட்டித்துக்கொண்டே போக முடியாது. அதற்கு விரைவில் முற்றுப்புள்ளி வைத்தாக வேண்டும்’ என்று தெரிவித்தார்.

இந்த நிலையில் தமிழகத்தில் முழு ஊரடங்கில் தளர்வுகள் அளிப்பது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துகிறார். ஊரடங்கில் மீண்டும் தளர்வுகள் அறிவிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Facebook Comments Box
Author: sivapriya