பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ்: மூன்றாவது சுற்றுக்கு முன்னேறினார் நடால்

பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் நடைபெற்று வரும் பிரெஞ்ச் ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் போட்டியின் ஆடவர் பிரிவில் மூன்றாவது சுற்றுக்கு முன்னேறினார் ரபேல் நடால்.

பிரெஞ்ச் டென்னிஸ் போட்டியில் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் இரண்டாவது சுற்றில் ஸ்பெயின் வீரர் ரபேல் நடால், பிரான்ஸ் வீரர் ரிச்சர்ட் கேஸ்கேட் ஆகியோர் மோதினர். இதில், 12 முறை சாம்பியனான அனுபவ வீரரான நடால் 6-0, 7-5, 6-2 என்ற நேர் செட்களில் கேஸ்கேட்டை தோற்கடித்து மூன்றாவது சுற்றுக்கு முன்னேறினார். இதேபோல மகளிர் பிரிவில் அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ் மூன்றாவது சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.

பிரெஞச் ஓபன் டென்னிஸ் போட்டியில் முதல் சுற்றில் வென்றதோடு, ஜப்பான் வீராங்கனை நவாமி ஒசாகா விலகியநிலையில், காயம் காரணமாக ஆஸ்திரேலியாவின் ஆஷ்லி பார்ட்டியும் இப்போது விலகியுள்ளார்.

Facebook Comments Box
Author: sivapriya