டோக்கியோ ஒலிம்பிக்: இந்திய வீரர், வீராங்கனைகளுக்கு தடுப்பூசி செலுத்த பிரதமர் மோடி உத்தரவு

டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் இந்திய வீரர், வீராங்கனைகளுக்கு விரைவில் கொரோனா தடுப்பூசி செலுத்த பிரதமர் நரேந்திர மோடி உத்தரவிட்டுள்ளார்.

ஜப்பானில் ஒலிம்பிக் போட்டி தொடங்க இன்னும் 49 நாட்களே உள்ள நிலையில், இந்தியாவின் தயார்நிலை குறித்து பிரதமர் ஆய்வு மேற்கொண்டார். இந்தியாவில் இருந்து இதுவரை சுமார் 100 வீரர்கள் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றிருப்பதாகவும் கூடுதலாக 25 வீரர்கள் தகுதி பெற வாய்ப்புகள் இருப்பதாகவும் பிரதமரிடம் அதிகாரிகள் எடுத்துரைத்தனர். ஒலிம்பிக்கில் கலந்துகொள்ளவிருக்கும் வீரர், வீராங்கனைகளை ஊக்குவிக்க , அடுத்தமாதம் அவர்களுடன் காணொலி வாயிலாக கலந்துரையாட திட்டமிட்டிருப்பதாக பிரதமர் கூறினார்.

மேலும் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் கலந்து கொள்வதற்காக பயணம் மேற்கொள்ளும் விளையாட்டு வீரர்கள், வாய்ப்புள்ள வீரர்கள், உதவியாளர்கள், அதிகாரிகள் அனைவருக்கும் வெகுவிரைவில் தடுப்பூசி செலுத்தப்பட வேண்டும் என்று பிரதமர் உத்தரவிட்டார்.

Facebook Comments Box
Author: sivapriya