இன்றுடன் ஓய்வுப்பெறுகிறது ஐஎன்எஸ் சந்தயக் போர் கப்பல்

இந்திய கடற்படையில் 40 ஆண்டுகளாக சேவையாற்றி வந்த ஐஎன்எஸ் சந்தயக் போர் கப்பல் இன்றுடன் ஓய்வு பெறுகிறது.

கடற்படை பயன்பாட்டுக்காக உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட இந்தக் கப்பல் கடந்த 1981 ஆம் ஆண்டு கடற்படையில் இணைக்கப்பட்டது. 1987 ஆம் ஆண்டு இலங்கை சென்ற இந்திய அமைதிப்படைக்கு உதவும் வகையில் அமைக்கப்பட்ட ஆப்ரேஷன் பவனில், ஐஎன்எஸ் சந்தயக் போர் கப்பல் முக்கிய பங்காற்றியது. சுனாமியால் பேரழிவு ஏற்பட்டபோதும், மனிதாபிமான நடவடிக்கைளுக்கு இந்தக் கப்பல் உறுதுணையாக இருந்தது.

இந்நிலையில் 40 ஆண்டுகால சேவையை முடித்துக் கொண்டு ஐஎன்எஸ் சந்தயக் போர் கப்பல் இன்று ஓய்வு பெறுகிறது. இதற்கான விழா விசாகப்பட்டினத்தில் உள்ள கடற்படை தளத்தில் எளிய முறையில் நடைபெறுகிறது.

Facebook Comments Box
Author: sivapriya