மாவட்ட செயலாளர்களுடன் இபிஎஸ் திடீர் ஆலோசனை… ஓபிஎஸ் பங்கேற்கவில்லை

அதிமுக தலைமையகத்தில் 9 மாவட்ட செயலாளர்களுடன் கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி திடீர் ஆலோசனை நடத்தி வருகிறார்.

அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரான எடப்பாடி பழனிசாமி எதிர்க்கட்சி தலைவராகப் பொறுப்பேற்றபின் முதன்முறையாக ஆலோசனையில் ஈடுபட்டுவருகிறார். அதில், சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 18 தொகுதிகளில் ஒரு இடத்தில்கூட அதிமுக வெற்றிபெறாதது ஏன் என்பது குறித்து கேட்டுவருவதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் எதிர்க்கட்சிகளுக்கு எவ்வாறு பதிலளிக்கவேண்டும் என்பது குறித்தும் பேசப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

 இபிஎஸ் நடத்தும் இந்த ஆலோசனையில், கட்சியின் ஒருங்கிணைப்பாளரான ஓ.பன்னீர்செல்வம் இதுவரை பங்கேற்கவில்லை.

Facebook Comments Box
Author: sivapriya