ஸ்மார்ட்போன் சந்தையில் அறிமுகமானது சாம்சங் கேலக்ஸி A22 5G, 4G: சிறப்பம்சங்கள் என்ன?

சாம்சங் நிறுவனத்தின் புதிய வெளியீடாக அறிமுகமாகி உள்ளது கேலக்ஸி A22 5G மற்றும் 4G ஸ்மார்ட்போன்கள். கேலக்ஸி A21s சந்தையில் பெற்ற வெற்றியை தொடர்ந்து இந்த மாடல் தற்போது வெளிவந்துள்ளது. A22 4G போனின் பரிசோதனை முயற்சியாக A22 5G வெளியாகி உள்ளதாக தெரிகிறது. 

கேலக்ஸி A22 5G : சிறப்பம்சங்கள் என்ன?

6.6 இன்ச் டிஸ்பிளே, ரியர் சைடில் மூன்று கேமிரா, மீடியாடெக் டைமான்ஸிட்டி 700 SoC, ஆண்ட்ராய்ட் 11 ஆப்பிரேட்டிங் சிஸ்டம், 5000 mAh பேட்டரி, 15 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் வசதி, டைப்-சி போர்ட், 5G நெட்வொர்க் உடன் வெளிவந்துள்ளது. இந்த போன் 4GB ரேமில் இரண்டு வேரியண்டாகவும், 6GB மற்றும் 8GB ரேமில் ஒரு வேரியண்டும் வெளிவந்துள்ளது. V வடிவ நாட்ச்சில் 8MP முன்பக்க கேமிரா உள்ளது. 

image

கேலக்ஸி A22 4G : சிறப்பம்சங்கள் என்ன?

6.4 இன்ச் AMOLED டிஸ்பிளே, ரியர் சைடில் நான்கு கேமிரா, மீடியாடெக் ஹீலியோ G80 SoC, ஆண்ட்ராய்ட் 11 ஆப்பிரேட்டிங் சிஸ்டம், 5000 mAh பேட்டரி, 15 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் வசதி, டைப்-சி போர்ட், 4G நெட்வொர்க் உடன் வெளிவந்துள்ளது. இந்த போன் 4GB ரேமில் இரண்டு வேரியண்டாகவும், 6GB ரேமில் ஒரு வேரியண்டும் வெளிவந்துள்ளது. U வடிவ நாட்ச்சில் 13MP முன்பக்க கேமிரா உள்ளது. 

கேலக்ஸி A22 5G 20252 ரூபாய் முதல் ஆரம்பமாகிறது. இப்போதைக்கு இந்த A22 சீரிஸ் ஐரோப்பிய சந்தையில் அறிமுகமாகி உள்ளது. விரைவில் இந்தியாவிலும் வெளியாகும் என தெரிகிறது. 

 

Facebook Comments Box
Author: sivapriya