”அன்னையா என நான் அழைத்த பாட்டு அண்ணனின் ஆயிரம் நினைவுகள் மனதில் ஓடுகின்றன” – கமல்ஹாசன்

மறைந்த பாடகர் எஸ்.பி பாலசுப்ரமணியம் பிறந்தநாளையொட்டி ‘அன்னையா.. அன்னையா என நான் அழைத்த பாட்டு அண்ணன் ஆயிரம் நினைவுகள் மனதில் ஓடுகின்றன” என்று நடிகர் கமல்ஹாசன் எஸ்.பி.பியுடனான நினைவுகளை பகிர்ந்துகொண்டுள்ளார்.

இன்று மறைந்த பாடகர் எஸ்.பி பாலசுப்ரமணியத்தின் 75 வது பிறந்தநாள். தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவியிலிருந்து பலரும் எஸ்.பி.பியுடனான நினைவுகளை இன்று பகிர்ந்து வருகிறார்கள்.


அந்த வகையில், நடிகர் கமல்ஹாசான் தனது ட்விட்டர் பக்கத்தில், “அன்னையா அன்னையா என நான் அழைத்த பாட்டு அண்ணன், எண்ண இயலாப் பாடல்களில் என்னோடு இரண்டில்லாமல் கலந்த குரல்வண்ணன், எஸ்பிபிக்கு இன்று பிறந்த நாள். ஆயிரம் நினைவுகள் மனதில் ஓடுகின்றன. ‘உனக்கென்ன மேலே நின்றாய் ஓ எங்கள் பாலு’ என்று பிறந்தாள் வாழ்த்துகளோடு இருவரும் ஒன்றாக இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்துகொண்டுள்ளார்.

Facebook Comments Box
Author: sivapriya