முதல்வர் நிவாரண நிதிக்கு தலா ரூ. 5 லட்சம் நிதியுதவி அளித்த சீமான், பாரதிராஜா

முதல்வரின் கொரோனா தடுப்புப் பணிகளுக்காக இயக்குநர் பாரதிராஜா தமிழக முதல்வரை சந்தித்து 5 லட்சம் நிதியுதவி அளித்திருக்கிறார்.

கொரோனா இரண்டாவது அலை காரணமாக தமிழகத்தில் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை அதிகரித்தது. இதனையொட்டி, தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் பொதுமக்களும் தொழில் நிறுவனங்களும் நிதி வழங்க வேண்டுகோள் விடுத்திருந்தார்.

image

முதல்வரின் வேண்டுகோளை ஏற்று பல துறையினரும் நிதியுதவி அளித்து வருகின்றனர்.  அந்த வகையில், இன்று தலைமைச் செயலகத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுடன் சென்று முதல்வர்  மு.க ஸ்டாலினை சந்தித்த இயக்குநர் பாரதிராஜா 5 லட்சம் நிதியுதவி வழங்கினார். அவருடன், சென்ற  நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானும் 5 லட்சம் நிதியுதவி அளித்திருக்கிறார்.

Facebook Comments Box
Author: sivapriya