எதிர்பார்ப்புகளை எகிற வைத்துள்ள ‘777 சார்லி’ – தமிழில் வெளியிடும் கார்த்திக் சுப்புராஜ்!

பாபி சிம்ஹா, ரக்‌ஷித் ஷெட்டியின் ’777 சார்லி’ கன்னட படத்தை தனது தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் தமிழில் வெளியிடுகிறார் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ்.

கன்னட முன்னணி நடிகர் ரக்‌ஷித் ஷெட்டி தற்போது ‘777 சார்லி’ என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். சார்லி என்ற நாயுடனான அன்பை சொல்லும் நகைச்சுவைப் படமாக உருவாகியிருக்கும், இப்படத்தில் நடிகர் பாபி சிம்ஹா முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இது பாபி சிம்ஹா அறிமுகமாகும் முதல் கன்னட படம் என்பது குறிப்பிடத்தக்கது. வெளியாகும் முன்னே எதிர்பார்ப்புகளை எகிற வைத்துள்ள  இப்படத்தை கிரண்ராஜ் இயக்கியுள்ளார்.

image

 எதிர்பார்ப்புகளுக்குக் காரணம், கன்னடம், தெலுங்கு , மலையாளம், இந்தி, தமிழ் என 5 மொழிகளில் வெளியாகும், இப்படத்தை நடிகர் பிரித்விராஜ் தனது தயாரிப்பு நிறுவனத்தின் மூலமாக மலையாளத்தில் வெளியிடப்போவதாக நேற்று அறிவித்தார். ’கேஜிஎஃப் 2’ படத்தையும் மலையாளத்தில் பிரித்விராஜ்தான் வெளியிடவிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், பிரித்விராஜை தொடர்ந்து தற்போது இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் தனது ஸ்டோன் பெஞ்ச் தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் ’777 சார்லி’ படத்தை தமிழில் வெளியிடப்போவதாக ட்விட்டர் பக்கத்தில் அறிவித்திருக்கிறார்.  “சார்லி ஒரு அழகான படம். மனிதனுக்கும் ஒரு அற்புதமான குழந்தைக்கும் இடையிலான நிபந்தனையற்ற அன்பை சொல்லும் படம். இப்படத்தை தமிழில் வழங்குவதில் நான் பெருமைப்படுகிறேன்” என்று கார்த்திக் சுப்புராஜ் ட்விட்டரில் கூறியுள்ளார். கார்த்திக் சுப்புராஜின் ’ஜிகர்தண்டா’ படத்தில் ரக்‌ஷித் ஷெட்டி சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 கொரோனா ஊரடங்குகள் முடிந்தவுடன் தியேட்டர்களில் வெளியாகவிருக்கும் இப்படத்தின் ட்ரைலர் நடிகர் ரக்‌ஷித் ஷெட்டியின் பிறந்தநாளை முன்னிட்டு வரும் ஜூன் 7 ஆம் தேதி வெளியாகவிருக்கிறது.

Facebook Comments Box
Author: sivapriya