12 மாதங்களில் 30 கிலோ எடை குறைத்து பாகிஸ்தான் அணியில் இடம் பிடித்த இளம் வீரர்

12 மாதங்களில் 30 கிலோ உடல் எடையை குறைத்து பாகிஸ்தான் கிரிக்கெட் அணியில் இடம் பிடித்துள்ளார் இளம் வீரர் ஒருவர். 22 வயதான விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ஆசாம் கான் தான் அந்த வீரர். இங்கிலாந்து மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுடனான டி20 தொடரில் விளையாட அவர் முதல்முறையாக பாகிஸ்தான் அணியில் தேர்வாகி உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்ககது.

ஆசாம் கான் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மொயின் கானின் மகன். அணியில் அவரை தேர்வு உடல் எடையை குறைக்குமாறு தேர்வு வாரியம் குழுவினர் தெரிவித்ததன் பேரில் உடல் எடையை குறைத்துள்ளார். 

பவர் ஹிட்டரான ஆசாம் கான் சிக்சர் அடிப்பதில் பெயர் பெற்றவர். பாகிஸ்தான் சூப்பர் லீக் மற்றும் இலங்கை பிரமீயர் லீக் தொடரில் அவர் விளையாடி உள்ளார். ஒரே ஒரு முதல் தர கிரிக்கெட் போட்டியில் விளையாடி உள்ளார் அவர். அது தவிர 36 டி20 கிரிக்கெட் போட்டிகளிலும் அவர் விளையாடி உள்ளார். 

Facebook Comments Box
Author: sivapriya