பிரிட்டன்: 12 முதல் 15 வயது வரையிலான சிறுவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போட அனுமதி!

பிரிட்டன் நாட்டில் பன்னிரண்டு முதல் பதினைந்து வயது வரையிலான சிறுவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்த அனுமதி அளித்துள்ளது அரசு. அதனை பிரிட்டன் மருந்து ஆணையம் உறுதி செய்துள்ளதாக தெரிவித்துள்ளார் ஆணையத்தின் தலைமை செயல் அதிகாரி ஜூன் ரெய்ன். 

“அதற்கான மருத்துவ பரிசோதனை மிகவும் கூர்மையாக நாங்கள் கவனித்தோம். 12 முதல் 15 வயது வரையிலான சிறுவர்களிடத்தில் Pfizer மற்றும் BioNTech மாதிரியான கொரோனா தடுப்பூசிகள் எப்படி செயல்படுகிறது. ஏதேனும் பக்கவிளைவுகள் ஏற்படுகின்றனவா? இந்த தடுப்பூசியை செலுத்திக் கொள்வது பாதுகாப்பு தானா? அதன் பயன் என்ன? என பல்வேறு முடிவுகளின் அடைப்படையில் இந்த முடிவை எடுத்துள்ளோம். 

இந்த வயது பிரிவினரை தடுப்பூசி செலுத்தும் திட்டத்தின் கீழ் சேர்ப்பதா என்ற இறுதி முடிவை நோய்த்தடுப்புக்கான கூட்டுக் குழுதான் எடுக்கும்” என ஜூன் தெரிவித்துள்ளார். 

Facebook Comments Box
Author: sivapriya