“இனிதான் ரோகிக் சர்மாவின் சிறந்த இன்னிங்சை பார்க்க இருக்கிறீர்கள்” – பயிற்சியாளர் விக்ரம்

ரோகித் சர்மாவின் பெஸ்ட் டெஸ்ட் இன்னிங்ஸ் இனிதான் வர இருக்கிறது என்று இந்திய கிரிக்கெட் அணியின் பேட்டிங் பயிற்சியாளர் விக்ரம் ரத்தோர் தெரிவித்துள்ளார்.

‘டைம்ஸ் ஆஃப் இந்தியா’வுக்கு பேட்டியளித்துள்ள அவர் “ரோகித் சர்மாவின் ஆட்டத்தில் இப்போது ஒரு கட்டுப்பாடு இருக்கிறது. அவரின் மன நிலையில் மாற்றம் இருக்கிறது. அவர் இப்போது டெஸ்ட் கிரிக்கெட்டில் சாதிக்க வேண்டும் என துடிக்கிறார். டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு அவர் தாமதமாக வந்தாலும் அவருக்கென ஒரு திட்டம் இருக்கிறது. அதனால்தான் அண்மை காலங்களாக அவர் டெஸ்ட் கிரிக்கெட்டை சிறப்பாக கையாளுகிறார். அவருடைய ஒருநாள் டி20 சாதனைகளை பார்த்தால் அவரின் திட்டம் உங்களுக்கு புரியும்” என்றார் விக்ரம் ரத்தோர்.

image

மேலும் பேசிய அவர் “அவர் மிகவும் நிதானமாக விளையாடி பெரிய ஸ்கோர்களை எட்ட முயற்சி செய்வார். அது அவருக்கு டி20, ஒருநாள் போட்டிகளில் சாத்தியப்பட்டு இருக்கிறது. இப்போது அதேபோல டெஸ்ட் போட்டியிலும் மிகப்பெரிய ஸ்கோரை எட்ட முயற்சி செய்து வருகிறார். ரோகித் சர்மாவுக்கு டெஸ்ட் போட்டியில் சாதிக்க நிறைய இருக்கிறது. இனிமேல் தான் டெஸ்ட்டில் அவரின் பெஸ்ட் இன்னிங்ஸை பார்க்க இருக்குறீர்கள்” என்றார் விக்ரம் ரத்தோர்.

முன்னதாக இந்தியா – நியூசிலாந்து அணிகளுக்கு இடையே ஜூன் 18 முதல் 22 ஆம் தேதி வரை உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி நடக்கிறது. இதற்காக இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தின் சவுத்தாம்படன் நகருக்கு சென்று இருக்கிறது. அங்கு பயோ பபுள் பாதுகாப்பு வளையத்தில் இந்திய அணி தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்கள்.

Facebook Comments Box
Author: sivapriya