வெங்கையா நாயுடுவின் ட்விட்டர் ஐடியில் ‘ப்ளு டிக்’ நீக்கப்பட்டு மீண்டும் சேர்ப்பு

துணை குடியரசுத்தலைவர் வெங்கையா நாயுடுவின் தனிப்பட்ட ட்விட்டர் கணக்கில் இருந்த ‘ப்ளு டிக்’ திடீரென்று நீக்கப்பட்ட நிலையில் மீண்டும் புளு டிக் வசதி வழங்கப்பட்டுள்ளது.
பிரபல சமூக வலைத்தளமான ட்விட்டர் தளத்தை பயன்படுத்தும் பிரபலங்கள் மற்றும் பிரபலமான நிறுவனங்களின் ஐடியை உறுதிப்படுத்துவதற்கு அடையாளமாக ப்ளு டிக்’ எனப்படும் வசதியை ட்விட்டர் வழங்குகிறது.
image
இந்த நிலையில், இந்திய துணை குடியரசுத்தலைவர் வெங்கையா நாயுடுவின் தனிப்பட்ட கணக்கிற்கு வழங்கப்பட்டிருந்த ‘ப்ளு டிக்’ வசதியை ட்விட்டர் நிறுவனம் திடீரென்று நீக்கியது. 13 லட்சத்துக்கும் அதிகமானோர் பின்தொடரும் வெங்கையா நாயுடுவின் ட்விட்டர் கணக்கில் இருந்த ‘ப்ளு டிக்’ நீக்கப்பட்டதற்கான காரணம் தெரிவிக்கப்படவில்லை. இதனால் இவ்விவகாரம் ட்விட்டரில் ட்ரெண்ட் ஆனது.
 
Author: sivapriya