ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத்தின் ட்விட்டர் கணக்கிலிருந்து ப்ளூ டிக் நீக்கம்

ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத்தின் ட்விட்டர் கணக்கிலிருந்து ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளது.

ட்விட்டரில் உறுதிப்படுத்தப்பட்ட கணக்கு என்பது அடையாளமாக ப்ளூ டிக் வழங்கப்படுவது வழக்கம். இன்று காலை துணை குடியரசு தலைவர் வெங்கையா நாயுடுவின் தனிப்பட்ட ட்விட்டர் கணக்கிலிருந்து ப்ளூ டிக் நீக்கப்பட்டதால் பலரும் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில் உறுதிப்படுத்தப்பட்டதற்கு அடையாளமாக குறிக்கப்படும் ப்ளூ டிக்கை ட்விட்டர் நிறுவனம் மீண்டும் சேர்த்தது.

இந்நிலையில், ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத்தின் ட்விட்டர் கணக்கிலிருந்து ப்ளூ டிக்கை நீக்கியுள்ளது ட்விட்டர் நிறுவனம். #BanTwitterInIndia என்ற ஹேஷ்டேக் ட்ரெண்டிங்கில் உள்ளது.

Facebook Comments Box
Author: sivapriya