பாலியல் தொல்லை புகார்: தனியார் பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன் ஜாமீன் மனு தள்ளுபடி

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரில் கைதாகியுள்ள ஆசிரியர் ராஜகோபாலனின் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

மாணவிகளுக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பிய புகாரில் மே 24ஆம் தேதி சென்னை தனியார் பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன் கைது செய்யப்பட்டார். அவர்மீதான குற்றங்களுக்கு ஆதாரங்கள் கிடைத்ததால் 3 நாட்கள் காவல்துறை விசாரணைக்கு உட்படுத்தி நேற்றையதினம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியது.

இந்நிலையில் ராஜகோபாலனின் ஜாமீன் மனு இன்று விசாரணைக்கு வந்தபோது, 3 நாட்கள் விசாரணையில் அவருக்கு எதிராக கூடுதல் ஆதாரங்கள் கிடைத்துள்ளதாகக் கூறி போலீஸார் ஜாமீன் வழங்க எதிர்ப்பு தெரிவித்ததால் ராஜகோபாலனின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து சென்னை போக்சோ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. புலன் விசாரணை இன்னும் முழுமையாக முடிவடையாததால் ஜாமீன் வழங்கமுடியாது என நீதிபதி முகமது பாரூக் கூறியுள்ளார்.

Facebook Comments Box
Author: sivapriya