’’உன் சின்ன சின்ன சிணுங்கல்கள்’’ – குழந்தையை அறிமுகப்படுத்திய ‘மயக்கம் என்ன’ ரிச்சா

நடிகை ரிச்சா கங்கோபத்யாய்க்கு குழந்தை பிறந்துள்ளது. தாய்மையுடன் தனது குழந்தையை அறிமுகப்படுத்தியுள்ளார்.

 தெலுங்கின் முன்னணி நடிகையாக இருந்த நடிகை ரிச்சா கங்கோபாத்யாய் தனுஷ் நடிப்பில் கடந்த 2011 ஆம் ஆண்டு வெளியான ‘மயக்கம் என்ன’, சிம்பு நடிப்பில் வெளியான ‘ஒஸ்தி’ படங்களில் நடித்து கவனம் ஈர்த்தார். குறிப்பாக, ’மயக்கம் என்ன’ படத்தில் திமிரான காதலியாகவும், பொறுப்பான மனைவியாகவும் நடித்து கவனம் ஈர்த்தார். இவரது நடிப்பைப் பார்த்து ‘யாமினி’ மாதிரி ஒரு பெண் கிடைக்கமாட்டாரா என்று சமூக வலைதளங்களில் இப்போதும் நெட்டிசன்கள் கொண்டாடி வருகிறார்கள்.

image

ஆனால், நடிகை ரிச்சா அமெரிக்காவில் எம்.பி.ஏ படிக்கும்போது தன்னுடன் படித்த சக மாணவர் ஜோ லாங்கெல்லாவை கடந்த 2019 ஆம் ஆண்டு காதல் திருமணம் செய்துகொண்டார். இந்தக் காதல் தம்பதிகளுக்கு தற்போது ஆண் குழந்தை பிறந்துள்ளது.

image

தாய்மையுடன் தனது மகனின் புகைப்படத்தை பூரிப்புடன் வெளியிட்டுள்ள ரிச்சா,

”எங்கள் மகன் லூகா ஷான் லாங்கெல்லா மே 27 ஆம் தேதி இந்த உலகிற்கு வருகை தந்தான். அவனது சின்ன சின்ன சிணுங்கல்கள், அனிமேஷன் செய்யப்பட்டது போன்ற முகப்பாவனைகளை வெறித்தனமாக காதலிக்கிறோம்.  அவன் அப்பாவைப் போலவே இருக்கிறான். ஆனால், அம்மாவின் மூக்கும் தலைமுடியும் அவனுக்கு இருக்கிறது. லூகா கரடி நீ எங்கள் வாழ்க்கையை விவரிக்க முடியாத மகிழ்ச்சியால் நிரப்பியிருக்கிறாய். இந்த அமைதியான இனிமையான அனுபவத்தை என் கணவர் கொடுத்திருக்கிறார். அவர், ஒரு சிறந்த அப்பா. எனக்கு ஊக்கத்தையும் பலத்தையும் கொடுத்து முடிவில்லாமல் நேசிக்கிறார்” என்று குறிப்பிடிருக்கிறார்.

Facebook Comments Box
Author: sivapriya