ஈரோடு மகேஷின் மனைவி யார் தெரியுமா? அட அவங்களும் சினிமா பிரபலம் தானாம்

பிரபல ரிவியில் ஒளிபரப்பாகிய அசத்த போவது யாரு நிகழ்ச்சியில் கொமடியராக அறிமுகமானவர் தான் ஈரோடு ரமேஷ்.

சிறப்பான பேச்சாளராகவும், இன்றைய இளம் தலைமுறையினரை உற்சாகப்படுத்தும் விதமாக தனது பேச்சினை அசத்துபவர். இவர் தற்போது தமிழில் பி.எச்டி படிப்பினை தொடர்ந்து வருகின்றார்.

2014ம் ஆண்டு விக்ரம் பிரபுவின் நடிப்பில் வெளிவந்த “சிகரம் தொடு” என்ற படத்தின் மூலம் சினிமா துறைக்கு அறிமுகமான இவர், பின்பு ஜம்புலிங்கம் 3d, இணையதளம் என சில படங்களில் நடித்து உள்ளார்.

ஈரோடு மகேஷின் அம்மாவுக்கு காது கேட்காது. ஈரோடு மகேஷ் பிறந்ததில் இருந்தே அவரது குரலை அவரது தாய் கேட்டதே இல்லையாம்.

மகேஷ் தனது இளைக்காலம் முழுவதையும், ஈரோட்டில் கழித்து, பின்பு வாய்ப்பு தேடியே சென்னைக்கு வந்துள்ளார்.

மகேஷ் , சன் மியூசிக் ஆங்கராக வேலை செய்த ஸ்ரீதேவியை காதலித்து கரம் பிடித்தார். இந்த ஜோடிக்கு அழகான பெண் குழந்தையும் உள்ளது.

தன்னுடைய வாழ்க்கையில் வெற்றி பெற்றதற்கு தாய், மனைவி, மகள் தான் என்று மகேஷ் அடிக்கடி எல்லா மேடையிலும் கூறுவதோடு, உண்மையாகவே மகேஷின் வெற்றிக்கு இவர்கள் தான் காரணம்.

தாய், தந்தையுடன் கூட்டுக்குடும்பமாக வசித்து வரும் ரமேஷ், யூரியூப்பில் இளைய தலைமுறைக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் காணொளிகளையும் பதிவிட்டு வருகின்றார்.

 

Facebook Comments Box
Author: admin