வரலாற்றில் இன்று

●913 – பைசாந்தியப் பேரரசர் மூன்றாம் அலெக்சாந்தர் போலோ விளையாடும் போது இறந்தார்.
●1523 – குசுத்தாவ் வாசா சுவீடனின் மன்னராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். டென்மார்க்கு, சுவீடன், நோர்வே இணைந்த கல்மார் ஒன்றியம் முடிவுக்கு வந்தது. இது சுவீடனின் தேசிய நாளாகக் கொண்டாடப்படுகிறது.
●1644 – சிங் மஞ்சு படைகள் பெய்ஜிங் நகரைக் கைப்பற்றின. மிங் வம்சம் வீழ்ச்சியடைந்தது.
●1674 – சிவாஜி மராட்டியப் பேரரசராக முடிசூடினார்.
●1711 – யாழ்ப்பாணத்தில் இந்து மதச் சடங்குகளுக்கு ஒல்லாந்து அரசினால் தடை விதிக்கப்பட்டது.
●1762 – ஏழாண்டுப் போர்: பிரித்தானியப் படைகள் கியூபாவின் அவானா நகரை முற்றுகையிட்டுக் கைப்பற்றின.
●1761 – சூரியனுக்கும் பூமிக்கும் இடையில் வீனஸ் கோளின் நகர்வு பூமியின் பல இடங்களிலும் அவதானிக்கப்பட்டது.
●1808 – பிரெஞ்சுப் பேரரசர் நெப்போலியனின் சகோதரன் யோசப் பொனபார்ட் எசுப்பானியாவின் மன்னராக முடிசூடினார்.
●1809 – சுவீடன் புதிய அரசியலமைப்பை அறிமுகப்படுத்தியது. 20 ஆண்டுகள் முழுமையான முடியாட்சியின் பின்னர் அரசியல் அதிகாரம் நாடாளுமன்றத்திற்கு வழங்கப்பட்டது. பதின்மூன்றாம் சார்லசு புதிய மன்னராகப் பதவியேற்றார்.
●1832 – பாரிசில் மாணவர் எழுச்சி முறியடிக்கப்பட்டது.
●1844 – கிறித்தவ இளையோர் அமைப்பு (YMCA) லண்டனில் அமைக்கப்பட்டது.
●1859 – ஆத்திரேலியா: குயின்ஸ்லாந்து என்ற பெயரில் புதிய குடியேற்ற நாடு நியூ சவுத் வேல்ஸ் இலிருந்து பிரித்தெடுக்கப்பட்டது.
●1862 – அமெரிக்க உள்நாட்டுப் போர்: அமெரிக்க ஒன்றியப் படைகள் டென்னிசி, மெம்பிசு நகரை கூட்டமைப்பினரிடம் இருந்து கைப்பற்றின.
●1862 – அமெரிக்க உள்நாட்டுப் போர்: அமெரிக்கப் படைகள் டென்னசியில் மெம்ஃபிசு நகரை கூட்டமைப்புப் படைகளிடம் இருந்து கைப்பற்றின.
●1882 – அரபிக் கடலில் இடம்பெற்ற புயலால் பம்பாயில் 100,000 பேர்களுக்கு மேல் கொல்லப்பட்டனர்.ஆனாலும் இந்தச் செய்தி பொய்யானது என பின்னர் நிரூபிக்கப்பட்டது.
●1889 – அமெரிக்கா, சியாட்டில் நகரில் ஏற்பட்ட தீயில் நகர மையம் முழுவதும் அழிந்தது.
●1912 – அலாஸ்காவில் நொவரப்டா எரிமலை வெடித்தது.
●1930 – இலங்கையில் வீரகேசரி நாளிதழ் தொடங்கப்பட்டது.
●1932 – அமெரிக்காவில் எரிவாயுவிற்கு முதன் முதலாக கலனிற்கு ஒரு சதம் என்ற அளவில் வரி அறவிடப்பட்டது.
●1942 – இரண்டாம் உலகப் போர்: மிட்வே சமரில் அமெரிக்கக் கடற்படை மிக்குமா என்ற சப்பானியப் போர்க்கப்பலைத் தாக்கி மூழ்கடித்தது.
●1944 – இரண்டாம் உலகப் போர்: ஓவர்லார்ட் நடவடிக்கை எனப் பெயரிடப்பட்ட நோமண்டி சண்டை ஆரம்பமானது. 155,000 கூட்டுப் படையினர் பிரான்சின் நோர்மண்டிக் கடற்கரைகளில் தரையிறங்கி, அத்திலாந்திக் சுவரைத் தகர்த்து முன்னேறினர்.
●1958 – தமிழருக்கு எதிரான இனவன்முறை, 1958: இலங்கையில் மேலும் 5,029 தமிழ் அகதிகள் கொழும்பில் இருந்து கப்பல் மூலம் யாழ்ப்பாணம் அனுப்பப்பட்டனர்.
●1968 – அமெரிக்க அரசியல்வாதி இராபர்ட் எஃப் கென்னடி லாஸ் ஏஞ்சலஸ் நகரில் உணவு விடுதி ஒன்றில் வைத்துச் சுட்டுக் கொல்லப்பட்டார்.
●1971 – சோவியத் ஒன்றியத்தின் சோயூசு 11 விண்கலம் ஏவப்பட்டது.
●1971 – கலிபோர்னியாவில் அமெரிக்க வான்படையின் எப்-4 பன்டெம் II போர் வானூர்தி பயணிகள் வானூர்தியுடன் வானில் மோதியதில் 50 பேர் உயிரிழந்தனர்.
●1971 – சோயுஸ் 11 விண்ணுக்கு ஏவப்பட்டது.
●1974 – சுவீடனில் நாடாளுமன்ற முடியாட்சி அமைக்கப்பட்டது.
●1981 – பீகார் தொடருந்து விபத்து: இந்தியாவில் தொடருந்து ஒன்று பாக்மதி ஆறு பாலம் ஒன்றில் தடம் புரண்டு வீழ்ந்ததில் 268 பேர் உயிரிழந்தனர், 300 பேர் காணாமல் போயினர்.
●1982 – லெபனான் போர் ஆரம்பமானது. இசுரேலியப் படையினர் தெற்கு லெபனானை ஊடுருவினர்.
●1984 – இந்திய இராணுவத்தினர் அம்ரித்சரில் உள்ள பொற்கோயிலில் தாக்குதல் நடத்தியதில் 576 பேர் கொல்லப்பட்டு 335 பேர் காயமுற்றனர்.
●1993 – மங்கோலியாவில் முதலாவது நேரடியான அரசுத்தலைவர் தேர்தல் நடைபெற்றது.
●2002 – 10 மீட்டர் விட்டமுள்ள புவியருகு விண்பொருள் ஒன்று நடுநிலக் கடலில் கிரேக்கத்திற்கும் லிபியாவிற்கும் இடையில் வீழ்ந்து வெடித்தது.
●2004 – இந்தியாவில் தமிழ் மொழி செம்மொழியாக அறிவிக்கப்பட்டது.

Facebook Comments Box