“வரலாறை கொச்சைப்படுத்தி தவறாக சித்தரிப்பதா?“- ’தி ஃபேமிலி மேன் 2’-க்கு சேரன் கண்டனம்

”தமிழ் இனத்தின் விடுதலைக்கு போராடிய இயக்கத்தை தவறாக சித்தரிக்கும் ‘தி ஃபேமிலி மேன்’  வெப்தொடரை நிறுத்தும்வரை அமேசான் ஃபிரைம் சந்தாதாரராக இருக்கவோ இணையவோ போவதில்லை” என்று இயக்குநர் சேரன் அறிவித்திருக்கிறார்.

 2019-ல் வெளியாகி வரவேற்பைப் பெற்ற ‘தி ஃபேமிலி மேன்’ தொடரின் இரண்டாம் பாகம் கடந்த மூன்றாம் தேதி வெளியானது. முதல் பாகத்தில் நடித்த மனோஜ் பாஜ்பாய், ப்ரியாமணி ஆகியோரோடு இரண்டாம் பாகத்தில் சமந்தாவும் பிரதான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இப்படம், ஈழத்தமிழர்களை தவறாக சித்தரித்துள்ளதாக சர்ச்சையையும் கண்டனங்களையும் குவித்துள்ளது.

image

இந்நிலையில், இயக்குநர் சேரன் தனது ட்விட்டர் பக்கத்தில் “தமிழ் இனத்தின் விடுதலைக்கு போராடிய இயக்கத்தின் வரலாறை கொச்சைப்படுத்தி தவறாக சித்தரிக்கும் இந்த வெப்தொடரை புறக்கணிக்கிறேன். இந்த தொடரை உடனே நிறுத்தவும். நிறுத்தும்வரை அமேசான் ஃபிரைம் சந்தாதாரராக இருக்கவோ இணையவோ போவதில்லை. இந்த வெப்தொடரை புறக்கணிக்கிறேன். இந்த தொடரை உடனே நிறுத்தவும். நிறுத்தும்வரை அமேசான் ஃபிரைம் சந்தாதாரராக இருக்கவோ இணையவோ போவதில்லை”என்று கூறியிருக்கிறார்.

Facebook Comments Box
Author: sivapriya