மாவட்டங்களுக்கு இடையே பயணம் செய்யலாமா?: ஊரடங்கு தளர்வுகள் -சில கேள்விகளும் பதில்களும்..

ஊரடங்கு தளர்வு குறித்து மக்களிடம் பல சந்தேகங்களும், கேள்விகளும் உள்ளன. அந்தக் கேள்விகளையும், பதில்களையும் பார்க்கலாம்.

ஐடி நிறுவன ஊழியர்கள் அலுவலகம் சென்று பணிபுரிய அனுமதி உண்டா?

தடை நீடிக்கிறது

திருமண விழாக்களில் எத்தனை பேருக்கு அனுமதி?

50 பேருக்கு மட்டும் அனுமதி

இறுதிச் சடங்கு நிகழ்வுகளில் எத்தனை பேருக்கு அனுமதி?

20 பேருக்கு மட்டும் அனுமதி

தனியார் நிறுவனங்கள், தனியார் அலுவலகங்கள் செயல்பட அனுமதி உண்டா?

இல்லை

கூரியர், தபால் சேவைகள் இயங்குமா?

அனுமதிக்கப்பட்டுள்ளது

ஸ்விகி, ஸோமேட்டோ, இ-காமர்ஸ் வணிகத்துக்கு அனுமதி உண்டா?

அனுமதிக்கப்பட்டுள்ளது

கட்டுமான வேலைகளுக்கு அனுமதி உண்டா?

பாதியில் உள்ள கட்டுமானப்பணிகளுக்கு அனுமதி

மாவட்டங்களுக்கு இடையே பயணம் செய்யலாமா?

அனுமதி இல்லை

மாவட்டத்துக்குள் பயணப்படலாமா?

மாவட்டத்துக்குள் பயணிக்க இ-பதிவு அவசியம்.

Facebook Comments Box
Author: sivapriya