திருவள்ளூர்: சிகிச்சையளித்த அரசு மருத்துவர்களுக்கு நன்றி தெரிவித்து கடிதம் எழுதிய மூதாட்டி

திருவள்ளூரில் 85 வயது மூதாட்டி ஒருவர், அரசு மருத்துவமனையில் தனக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்களுக்கு நன்றி கடிதம் எழுதியுள்ளார்.

திருவள்ளூர் அடுத்த ஈக்காடு பகுதியை சேர்ந்தவர் ராதம்மாள். 85 வயதான இவருக்கு கடந்த 3 நாட்களுக்கு முன்பு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் அவரது மகன் ஜனார்த்தனன், 108 ஆம்புலன்ஸ் உதவியுடன் திருவள்ளூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தார். அங்கு அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. ஆனால் பரிசோதனையில் கொரோனா இல்லை என முடிவு வந்தது. இதையடுத்து அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். 

image

இந்த நிலையில், 3 நாட்களாக தன்னை அன்போடும் கவனமாகவும் பார்த்துக்கொண்ட மருத்துவர்களுக்கு நன்றி தெரிவித்து அந்த மூதாட்டி கடிதம் எழுதியுள்ளார். கடிதத்தை கண்டு நெகிழ்ச்சியடைந்த மருத்துவர்கள், மூதாட்டியின் கடிதம் தங்களுக்கு உற்சாகமும் உத்வேகமும் அளிப்பதாக மகிழ்ச்சி தெரிவித்தனர்.

Facebook Comments Box
Author: sivapriya