’’இவ்வளவு குறைவான சம்பளமா?’’ -இலங்கை கிரிக்கெட் வாரியத்திற்கு எதிராக வீரர்கள் போர்க்கொடி

இலங்கை கிரிக்கெட் வாரியம் கொண்டு வந்துள்ள ஒப்பந்தத்தில் கையெழுத்திட முடியாது என அந்நாட்டு வீரர்கள் போர்க்கொடி உயர்த்தியுள்ளனர்.

இலங்கை வாரியம் கொண்டு வந்துள்ள ஊதிய ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதற்கான கெடு கடந்த 3ஆம் தேதியுடன் முடிந்தது. இந்நிலையில் அனைத்து வீரர்களும் கூட்டாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில் வெளிநாட்டு கிரிக்கெட் வீரர்களுக்கு தரப்படும் ஊதியத்தை விட தங்களுக்கு 3 மடங்கு குறைவான ஊதியமே நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக இலங்கை வீரர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

எனினும் நாட்டுக்காக விளையாடுவதில் தாங்கள் உறுதியாக இருப்பதாகவும் எனவே ஒப்பந்தத்தில் கையெழுத்திடாவிட்டாலும் அடுத்து வரும் இங்கிலாந்து தொடரில் விளையாட தயாராக இருப்பதாகவும் வீரர்கள் கூறியுள்ளனர். கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ள போதும் வீரர்களுக்கான ஒப்பந்தத்தில் எந்த மாற்றமும் செய்யப்போவதில்லை என இலங்கை கிரிக்கெட் வாரியம் உறுதிபடத் தெரிவித்துள்ளது.

Facebook Comments Box
Author: sivapriya