நாதஸ்வரம் சீரியல் மலர் மீண்டும் சின்னத்திரை- க்கு வறாங்க? அதுவும் இந்த சீரியல் லையா? மகிழ்ச்சியில் ரசிகர்கள்!!!

நடிகை ஷ்ரிதிகா இவர் கடந்த 2012 ம் ஆண்டு திருமுருகன் இயக்கிய நாதஸ்வரம் சீரியல் மூலம் மக்களிடத்தில் பிரபலமடைந்தார்… அதிலும், இவர் நடித்த மலர் கதாப்பாத்திரத்தமும், மலர் கோபி ஜோடி காட்சிகளும் மிகவும் வரவேற்கப்பட்டது..

இவர் 2012-ம் ஆண்டு சன் குடும்ப விருதுகள் நிகழ்ச்சியில்,சிறந்த மருமகளுக்கான விருதைப் பெற்றார்… அது போக மாமியார் தேவை, வைதேகி, உறவுகள் சங்கமம் போன்ற பல தொடர்களில் கதாநாயகியாக நடித்துள்ளார்.. அது மட்டுமின்றி மதுரை டூ தேனி திரைப்படத்தில் கதாநாயகியாகவும் நடித்துள்ளார்…

தனுஷ் நடிப்பில் வெளியான, வேங்கை படத்தில் தனுஷின் தங்கையாகவும், வெண்ணிலா கபடி குழு போன்ற படங்களிலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது… தற்போது அவர் சன் டிவி-யில் கல்யாணப் பரிசு சீசன் 2 வில் நடித்து வந்தார்… இந்த ஊரடங்கின் காரணமாக பல சீரியல்கள் நிறுத்தப்பட்டது..

அது போக பல ஹீரோயின்கள் சீரியலை விட்டு விலகியும் வருகின்றனர்.. அந்த வகையில் சன் டிவியில் ஒளிப்பரப்பாகும், மகாராசி சீரியலில் கதாநாயகி விலகியதை தொடர்ந்து, அந்த கதாப்பாத்திரத்தில் நடிக்க, நடிகை ஸ்ரிதிகா சம்மதித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது..

இனி பாரதியாக நம் மலர்.. அதனால் ரசிகர்கள் மகிழ்ச்சியாக உள்ளனர்… இன்னும் இந்த ஊரடங்கு முடியிறதுக்குள்ள இன்னும் எவ்வளவு மாற்றங்கள் வரப்போகுதோ? பொறுத்திருந்து பார்ப்போம்… மேலும் தகவல்களுக்கு இத்தளத்துடன் இணைந்திருங்கள்…

 

Facebook Comments Box
Author: admin