தமிழக வளர்ச்சி கொள்கை குழு: துணைத் தலைவராக ஜெ.ஜெயரஞ்சன் நியமனம்

<

div>

தமிழக வளர்ச்சி கொள்கை குழுவிற்கு புதிய உறுப்பினர்கள் நியமனம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. துணைத் தலைவர், முழுநேர உறுப்பினர்கள், பகுதி நேர உறுப்பினர்கள் என 10 பேரை நியமித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு‌ பிறப்பித்துள்ளார்.

தமிழக வளர்ச்சிக் கொள்கை குழுவின் துணைத் தலைவராக பொருளாதார அறிஞர் ஜெ.ஜெயரஞ்சன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். மாநில வளர்ச்சி கொள்கை குழுவின் உறுப்பினராக இராம. சீனிவாசன், பகுதி நேர உறுப்பினர்களாக ம. விஜயபாஸ்கர், சுல்தான் அகமது இஸ்மாயில், மு.தீனபந்து , மல்லிகா சீனிவாசன், ஜோ. அமலோற்பவ நாதன், சித்த மருத்துவர் கு சிவராமன், நர்த்தகி நடராஜ், மன்னார்குடி திமுக எம்எல்ஏ டிஆர்பி ராஜா உள்ளிட்டோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

Facebook Comments Box
Author: sivapriya