ஆந்திரா: பணிமுடிந்து வீடு திரும்பிய செவிலியலியரிடம் வாகனத்தை பறிமுதல் செய்த போலீசார்

<

div>

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் நகரில் ஊரடங்கு நேரத்தில் பணி முடிந்து வீடு திரும்பி கொண்டிருந்த தனியார் மருத்துவமனை செவிலியருக்கு போலீசார் அபராதம் விதித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி வருபவர் லட்சுமி அபர்ணா. இவர் காலையில் பணிக்கு சென்று மாலையில் வீடு திரும்புவார். இந்நிலையில் ஊரடங்கு அமலில் இருப்பதால் நேற்று மாலை பணி முடித்துவிட்டு வீட்டிற்குச் சென்று கொண்டிருந்தார். அப்போது காவலர்கள் அவரை வழி மறித்து இருசக்கர வாகனத்திற்கு அபதாரம் விதித்துள்ளனர். இதனால் கோபமடைந்த அந்த செவிலியர் காவல்துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

image

தான் செவிலியர் என்றும் முன் களப்பணியில் ஈடுபட்டு வருவதால் வாகனத்திற்கு அனுமதி சீட்டு கூட உள்ளது எனவும் தெரிவித்துள்ளார். இதில் கோபம் அடைந்த போலீசார் வாகனத்தை பறிமுதல் செய்ததோடு வாகனத்தை ஓட்டி வந்த உறவினரை காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்ல முயன்றனர். இதனால் அந்த செவிலியர் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார்.

சாலையில் அமர்ந்து போராட்டம் நடத்திய செவிலியரை போலீசார் தரதரவென இழுத்து வாகனத்தில் ஏற்றி காவல் நிலையம் அழைத்துச் சென்றனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு நிலவியது.

Facebook Comments Box
Author: sivapriya