பிரிட்டன்: வேலை செய்யும்போது மயங்கி விழுவது போல நடித்த ஊழியர் – வீடியோ

<

div>

பிரிட்டனில் வேலை செய்யும்போது மயங்கி விழுவது போல நடித்த ஊழியரின் வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

பிரிட்டனை சேர்ந்த நபர் ஒருவர் வேலை செய்யும்போது மயங்கி விழும் வீடியோவை ட்விட்டரில் பகிர்ந்திருந்தார். அந்த வீடியோ பதிவிட்ட சில மணி நேரங்களில் 80 லைக்குகளும 1 லட்சம் பேரும் பார்த்தனர். பலரும் அந்த வீடியோவை பார்த்து மயங்கி விழுந்த நபருக்காக பரிதாபப்பட்டனர். மேலும் இப்படி வேலை வாங்கிய நிறுவனத்தை பலரும் திட்டி தீர்த்தனர்.

ஆனால் உண்மை இப்போது வெளியாகி இருக்கிறது. அந்த நபர் வேலை செய்யும் நிறுவனத்திடம் விடுமுறை கேட்கவே இப்படியொரு நாடகத்தை நடத்தியுள்ளார் என தெரிய வந்துள்ளது. இப்படி அவர் பலமுறை பல்வேறு காரணங்கள் கூறி விடுப்பு எடுப்பதும் தெரிய வந்துள்ளது. இந்த நடிப்பை நெட்டிசன்கள் பலரும் வியந்து கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.

Facebook Comments Box
Author: sivapriya