இங்கிலாந்து வெற்றி பெற 273 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது நியூசிலாந்து

லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வரும் இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து வெற்றி பெற 273 ரன்கள் இலக்கு நிர்ணயித்துள்ளது நியூசிலாந்து அணி. இந்த டெஸ்ட் போட்டியின் ஐந்தாவது நாளான இன்றைய ஆட்டத்தில் மேலும் இரண்டு செஷன்கள் எஞ்சியுள்ளன. 

முதல் இன்னிங்ஸில் நியூசிலாந்து 378 ரன்களும், இங்கிலாந்து 275 ரன்களும் எடுத்தன. நூலிழையில் ஃபாலோ ஆனை தவிர்த்தது இங்கிலாந்து. அதற்கு இங்கிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர் ரோரி பர்ன்ஸ் மற்றும் மழை பொழிவும் உதவின. இந்த ஆட்டத்தின் மூன்றாவது நாள் முழுவதுமாக மழையினால் நடத்தப்படாமல் கைவிடப்பட்டது. 

தொடர்ந்து இரண்டாவது இன்னிங்ஸை விளையாடிய நியூசிலாந்து 169 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து டிக்ளேர் செய்ததது. அதனால் இங்கிலாந்து அணி 273 ரன்களை எடுத்தால் வெற்றி என்ற இலக்கை இரண்டாவது இன்னிங்ஸில் விரட்டி வருகிறது.

 

Facebook Comments Box
Author: sivapriya