டெல்லியில் மிகவும் குறைந்த தினசரி கொரோனா பாதிப்பு: இன்று 381 பேருக்கு தொற்று

டெல்லியில் ஏப்ரல் மாத இறுதியில் தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 30 ஆயிரத்தை தொட்ட நிலையில், இன்று தினசரி பாதிப்பு 381ஆக குறைந்துள்ளது.

டெல்லியில் இன்று 381 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சனிக்கிழமையன்று 414 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தனர். இதனால் டெல்லியில் கொரோனா பாதிப்பு விகிதம் 0.5% ஆக குறைந்துள்ளது.கடந்த 24 மணி நேரத்தில் டெல்லியில் 1,189 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்துள்ளனர், 34 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தனர். டெல்லியில் தற்போது 5,889 பேர் கொரோனா பாதிப்புக்கு சிகிச்சைபெற்று வருகின்றனர்.

 

Facebook Comments Box
Author: sivapriya